தமிழ்நாடு

தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் அவதி

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். 

வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 35.40 மில்லி மீட்டர், தரங்கம்பாடியில் 11 மில்லி மீட்டர், சீர்காழி 63.8 மில்லி மீட்டர், கொள்ளிடம் 3.80 மில்லி மீட்டர், மணல்மேடு 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா விடுமுறை அளித்து உத்தரவிட்டார். 

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலை 8.15 மணிக்கு தாமதமாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். ஏராளமான மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து மழையில் நனைந்தவாறு திரும்பிச் சென்றனர். 

மாணவர்கள் அவதி அடைவதை தடுக்கும் வகையில் விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் முன்னதாக அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT