முகப்பு
தமிழ்நாடு

ஓரிரு நாள்களில் வீடு திரும்புகிறார் பாரதிராஜா

மருத்துவமனையில் இருந்து இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாள்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 2 செப்டம்பர், 2022 at 4:57 PM
பாரதிராஜா
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

மருத்துவமனையில் இருந்து இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாள்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பாரதிராஜா, சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். நுரையீரல் மற்றும் இதயம் சாா்ந்த பிரச்னைகள் அவருக்கு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். 

சிகிச்சையின் பயனாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.