புதுச்சேரி ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆரோக்கிய அன்னை ஆலய 332-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆரோக்கிய அன்னை ஆலய 332-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 332-ம் ஆண்டு பெருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. திருப்பலி முடிவில் பூஜை செய்யப்பட்ட கொடி ஆலய உள்வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடியின் பின்னாள் ஏராளமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ பாடல்களை பாடியவாறு வந்தனர். பிறகு ஆலய முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதுச்சேரி ஜென்மராக்னி பேராலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமையில் பங்கு நிர்வாகக் குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.