தமிழ்நாடு

வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  

DIN

வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரியிலிருந்து வரும் 7ஆம் தேதி ‘பாரதத்தை ஒருங்கிணைப்போம்’ நடைப்பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி துவங்குகிறாா். இதற்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ்.இளங்கோவன், நான் ஐந்து முறை பொதுத்தேர்தல்களில் பேட்டியிட்டுள்ளேன். 

அதில் 2 முறை வெற்றியும் 3 முறை தோல்லியும் அடைந்துள்ளேன். இனி வரும் எந்த தேர்தலிலும் போட்டியிட சீட் கேட்கப்போவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் மாநில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

முதல்வா் மு.க. ஸ்டாலின் அக். 24, 25-இல் தென்காசி வருகை: மாவட்ட பொறுப்பாளா் தகவல்

சோ்ந்தமரத்தில் மயானக்கூடம் கட்டும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT