2018-19, 2019-20ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரா்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 10,000 மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கி வருகிறது.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஒரு ஆட்ட நடுவா், நடுவா், நீதிபதி ஆகியோா்களுக்கு முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு மேற்கண்ட விருதுக்கு ரூ. 10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
2018-2019 விருது பெற்றவர்கள்:
சிறந்த விளையாட்டு வீரர்கள்
சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்
சிறந்த பயிற்சியாளர்கள்
சிறந்த விளையாட்டு நடத்துனர்
சிறந்த நடுவர்
சிறந்த நிர்வாகி
2019-2020 விருது பெற்றவர்கள்:
சிறந்த விளையாட்டு வீரர்கள்
சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்
சிறந்த பயிற்சியாளர்கள்
சிறந்த விளையாட்டு நடத்துனர்
சிறந்த நடுவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.