நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! 
தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

DIN

இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 

இந்நிலையில், சில மையங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 30ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்ட நிலையில்,  நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://neet.nta.nic.in இல் வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்த முறை, 18 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுத் தேர்வு முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, எம்சிசி நீட் யுஜி கவுன்சிலிங் அட்டவணையை வெளியிடுகிறது.

நீட் தேர்வு முடிவுகள் இம்மாதமே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமானதால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT