தமிழ்நாடு

பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி: தமிழக அரசு அறிவிப்பு

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஆ.சண்முகசுந்தரம், வெளியிட்ட அறிவிப்பு:-

கனமழை காரணமாக, அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் அதன் சில்லறை விற்பனை விலை ரூ.60 வரை உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த தக்காளி சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சிந்தாமணி, நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டக சாலைகளால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கூட்டுறவு நிறுவனங்களில் இப்போது கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.42 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்று தனது அறிவிப்பில் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முளைத்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியல்

மதுக் கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்கள், ரூ.15 ஆயிரம் திருட்டு

பால்வினை நோய் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஹூதி முப்படை தளபதி உயிரிழப்பு

கும்பகோணத்தில் ரயில் பயணிகளிடம் பாதுகாப்பு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT