கைது செய்யப்பட்ட இளைஞர் ரவிசங்கர் 
தமிழ்நாடு

ரயில்வே ஊழியரை பழிவாங்க தண்டவாளத்தில் இரும்புத் துண்டு வைத்தவர் கைது

ஓமலூர் அருகே ரயில்வே ஊழியரை பழிவாங்குவதற்காக தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் மற்றும் கற்களை வைத்த இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

DIN

ஓமலூர் அருகே ரயில்வே ஊழியரை பழிவாங்குவதற்காக தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் மற்றும் கற்களை வைத்த இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி ரயில் நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பிரதான தண்டவாளமானது தின்னபட்டி வழியாக செல்கிறது. இந்த நிலையில் தின்னப்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் மற்றும் கற்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக சேலம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் ரயில்வே குற்ற பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.  

ரயிலை கவிழ்க்க யாரேனும் சதி திட்டம் தீட்டி இருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். அப்போது அங்கிருந்த பாயிண்ட்ஸ் மேன் தெரிவித்த தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தை வேலு மகன் ரவிசங்கர் வயது 21 என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த இளைஞர் தின்னப்பட்டி  பகுதியில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிப்பதாகவும்  அந்தப் பெண் தன்னிடம் பேச மறுத்ததால் தின்னப்பட்டி ரயில் நிலையம் பகுதியில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கு ரயில்வே பணியில் இருந்த பாயிண்ட்ஸ் மேன் ஒருவர் திட்டியதாகவும் அவரை பழிவாங்கும் நோக்கத்திற்காக இது போன்ற சம்பவத்தை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சேலம் ரயில்வே காவல்துறையினர் ரவிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT