இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து நடை பயணத்தை புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு இருந்தார்.
Advertisement
Advertisement
கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்ட அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.
இதையும் படிக்க | கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இன்றுமுதல் ராகுல் ஒற்றுமை நடைப்பயணம்
அவரை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள் அரிகரன், பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.