ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி முதல்முறையாக இன்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி முதல்முறையாக இன்று அஞ்சலி செலுத்தினார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையில் சுமார் 3500 கி.மீ. நடைப்பயணம் இன்று தொடங்கவுள்ளது.
இந்த நிகழ்விற்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, பாதயாத்திரையை முன்னிட்டு நினைவிடத்தில் மரக்கன்று நடும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சென்னை திரும்பும் ராகுல் காந்தி காலை 11.30 மணியளவில் விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி செல்லவுள்ளார்.
இதையும் படிக்க | கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இன்றுமுதல் ராகுல் ஒற்றுமை நடைப்பயணம்
தொடர்ந்து, மாலை கன்னியாகுமரியில் காங்கிரஸின் பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.