கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்
சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா்புரம் சித்ராநகா் ஜெ பிளாக் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்கின் மகன் தனுஷ் (25). இவா், மயிலாப்பூா் சி.பி. ராமசாமி சாலையில் புதன்கிழமை நடந்து சென்றபோது அங்கு சைக்கிளில் வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் தனுஷை கைது செய்தனா். விசாரணையில் அவா், சாலையில் தனியாகச் செல்லும் பெண்களை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், இதுவரை 25-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்ததும் தெரியவந்தது.