முகப்பு
தமிழ்நாடு

தீப்பெட்டி தொழிலாளர்களுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்! (படங்கள்)

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். 

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். 30,658 பயனாளிகளுக்கு ரூ. 117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கிவைத்தார். 

இதன் தொடர்ச்சியாக கோவில்பட்டிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு இலுப்பையூரணி தனியாா் தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது குறைகளைக் கேட்டார்.

பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு- குழந்தைகள் நலப் பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.