தமிழ்நாடு

ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்திலிருந்து கழன்று விழுந்த இரும்புக் கதவு: சாலையில் சிதறிய பாகங்கள்!

DIN

மதுரை: மதுரையில் ஓடிக்கொண்டிருந்த  அரசுப் பேருந்தின் பக்கவாட்டு இரும்புக் கதவு கழன்று விழுந்ததில், சாலையில் பாகங்கள் சிதறியது.

மதுரை மாநகரில் 200-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

மதுரை கோட்டத்தில் உள்ள பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில்  இயக்கப்பட்டு பாதி வழியில் நிற்பது, இருக்கைகள் சேதம், படிகட்டுகளில் ஓட்டை என தொடர்  குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையிலும், அது  முறையாக சீர் செய்யப்படாமல் இயக்கப்பட்டு  வருகிறது.

இந்நிலையில், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அவனியாபுரம் தெற்குவாசல் வழியாக மாட்டுத்தாவணி வரை இயக்கப்படும் அரசுப் பேருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதன் பாகம் நடுவழியில் கழண்டு கீழே விழுந்து இரும்புக் கம்பி, பலகை என சாலையில் சிதறியது. 

பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதனை வாகனத்தின் ஓட்டுநரும், நடத்துனரும் சிரித்தபடியே கீழே இறங்கி வந்து சாலையில் சிதறிக் கிடந்த பாகங்களை எடுத்துச் சென்றனர்.  

மதுரை மாநகரில் உள்ள  அரசு பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT