தமிழ்நாடு

அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்: கமல்ஹாசன் இரங்கல்

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

DIN

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT