தமிழ்நாடு

'ஒற்றுமை தேவை' - சசிகலாவுடனான சந்திப்புக்குப் பின் வைத்திலிங்கம் பேட்டி

சசிகலாவை எதேச்சையாக சந்தித்ததாகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்,. 

DIN

சசிகலாவை எதேச்சையாக சந்தித்ததாகவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்,. 

மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில் அதிமுகவின் வைத்திலிங்கம், சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார். 

மன்னார்குடியிலிருந்து தஞ்சை திரும்பும் வழியில், தஞ்சாவூர் மாவட்டம் ஓவல்குடியில் யதார்த்தமாக சசிகலாவின் வாகனத்தைப் பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்து சசிகலாவிற்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் சசிகலா வாகனத்திலிருந்து இறங்கி அவருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். 

மேலும், வைத்தியலிங்கம் இன்று தனக்கு பிறந்தநாள் என்று சசிகலாவிடம் தெரிவிக்க, சசிகலா இனிப்பு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

சசிகலாவுடன் வைத்தியலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், 'திருமண நிகழ்வுக்காக சென்றபோது எதேச்சையாக சசிகலாவை சந்தித்தேன். எங்களுக்கு ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

இபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்கத் துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும். அவரின் ஆணவப் போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு செய்துகொண்டு கட்சியை அழிக்க நினைக்கிறார்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தீா்த்தக்குட ஊா்வலம்

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகள்: எம்எல்ஏ சுந்தா் ஆய்வு

சின்ன வெங்காயம், மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆலோசனை

ஊத்தங்கரை பெண் தலைமைக் காவலா் கமுதியில் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

ஒசூா்-பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. நரசிம்மன்

SCROLL FOR NEXT