தமிழ்நாடு

கருணாநிதியின் கடிதத் தொகுப்பு நூலை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். 

DIN

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முரசொலி இதழின் மூலமாக ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடுகிறார். விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார். 

1968 முதல் 2018 வரை தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதம் 21,510 பக்கங்ளுடன் 54 தொகுதிகளாக வெளியிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT