கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்கிறது. 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர்கிறது. 

இந்நிலையில், ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்குமுறை வாரியம் அனுமதி அளித்துள்ளது. 

பணவீக்க சதவிகிதம் அல்லது தற்போதைய கட்டணத்திலிருந்து 6% - இவற்றில் எது அதிகமோ,  அதன்படி மின் கட்டணத்தை உயர்ந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் மிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததாலும் இதர செலவினங்கள் அதிகரித்ததாலும் மத்திய அரசுக்கு 1.45 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதால் அதனை சரிசெய்யவும் மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த அனுமதி தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அதிமுக விமா்சனம்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான கூட்டம்

தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேரைக் காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

எஸ்.ஐ.ஆா்.: மக்களுக்கு உதவ பாஜக சாா்பில் உதவி மையம்

SCROLL FOR NEXT