தமிழ்நாடு

2047-ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும்: மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்

DIN

2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் 10வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தொழில்நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, எனவே பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம். 2047ல் இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். 2028-ல் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். 

எனவே நமது நாடு 2047ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும். உலக அளவில் 58 சி.இ. ஓ க்கள் இந்தியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்தியக் கல்வி முறையில் பயின்றவர்கள். புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. 760 மெய் நிகர் அறிவியல் ஆய்வகங்கள், திறன் மேம்பாட்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இக்கல்வி நிறுவனத்தின் புதிய அரங்குக்கு அமைச்சர் அடிக்கல் அவர் நாட்டினார்.

பின்னர் ஏஐஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தையும் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT