தமிழ்நாடு

எமரால்டு அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

எமரால்டு அணையில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

DIN

நீலகிரி: எமரால்டு அணையில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, அப்பர் பவானி போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் எமரால்டு அணைகளில் சுற்று வட்டாரபகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணையின் கொள்ளளவான 145 அடியை எட்டிய நிலையில்,  அணைக்கு  வினாடிக்கு 300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் அணைகளில் இருந்து 430 கன அடி உபரி நீரை திறந்து விட்டது. அணையின் ஒரு மதகு திறந்து 430 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் அதிகமாக செல்லும் பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT