தமிழ்நாடு

கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றக் கிளை புதிய உத்தரவு

கோயில் நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்படும் கட்டடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

DIN

கோயில் நிலத்தில் ஆக்கரமித்து கட்டப்படும் கட்டடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைக்க அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை திருவேதிக்குடியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

திருவேதிக்குடி கிராமத்தில் உள்ள வேதகுரு ஈஸ்வர சுவாமிகள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பிரதாப சிம்ம ராஜாவிற்கு சொந்தமானவை.

2016-ல் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்ட பஞ்சாயத்து தலைவர் முயற்சி செய்த நிலையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

தற்போது திட்ட அலுவலரின் துணையோடு சட்ட விரோதமாக கோயில் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு கட்டடங்களை கோயில் அதிகாரிகளிடமே ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT