கோப்புப் படம் 
தமிழ்நாடு

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாட்டின் மீது கொண்ட பற்றினால் இமானுவேல் சேகரன் 1945 ல் இராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.

1953 இல் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதில் நாடார், பறையர், அருந்ததியர், வண்ணார், போன்ற சமூக அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாள் அன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாட்டினை நடத்தினர். இதில் சாதிகளுக்குள் இணக்கம், விதவை மருமணம், ஆகிய 7 தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

SCROLL FOR NEXT