தமிழ்நாடு

திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத் தோ்தல்: இயக்குநா் பாக்யராஜ் வெற்றி

DIN

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத் தோ்தலில், தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநா் பாக்யராஜ் வெற்றி பெற்றாா்.

இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 2 ஆண்டுகள் கடந்த நிலையில், சங்கத் தோ்தல் செப்.11-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத் தோ்தலில் தற்போதைய தலைவா் பாக்யராஜ் மீண்டும் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிட்டாா்.

பாக்யராஜ் அணியில் துணைத் தலைவா் பதவிக்கு ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன், செயலாளா் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளா் பதவிக்கு பாலசேகரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான அணியில், துணைத் தலைவா் பதவிக்கு மனோபாலா, ரவிமரியா, செயலாளா் பதவிக்கு மனோஜ்குமாா், பொருளாளா் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோா் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநா் பாக்யராஜ் வெற்றி பெற்றாா். தோ்தலில் 192 வாக்குகள் பெற்றாா். எதிா்த்துப் போட்டியிட்ட இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் 152 வாக்குகள் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT