தமிழ்நாடு

கடும் போக்குவரத்து நெரிசல்: கோவை ஆத்துப்பால மேம்பாலப் பணிகளுக்கு சிக்கல்

DIN

கோவை: போக்குவரத்து நெரிசல் மற்றும் இட நெருக்கடியால் கோவை ஆத்துப்பால மேம்பாலப் பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடக்கிறது. 

பகல், இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை காத்திருந்து ஆத்துப்பாலத்தை கடக்க வேண்டியிருக்கிறது. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக்கையாகி விட்டது.

வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்டும் இடம் இன்றி பணி நடத்துவோர் தினருகின்றனர் மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நெடுஞ்சாலைத்து றையினரிடம் கேட்ட போது, "இரு பிரதான ரோட்டில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங் கள் சென்று வரலாம். ஆனால் இங்கே பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல் 3 கி.மீ தூரத்தை மிச்சமாக்க பல நிமிட நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருந்திருக்கிறது.

கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் பூட்டி வைக்கிற ரோட்டில் சென்று வரும் திட்டம் பாலம் கட்டும் பணி தொடங்கும் போது இருந்தது. அப்போது போக்குவரத்து பிரச்னை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது. இப்போது நிலைமை கைமாறி போய்விட்டது. 

கடும் நெரிசல் காரணமாக பகல் நேரத்தில் பணி நடத்த முடியவில்லை. இரவு நேரத்திலும் வாகனங்கள் சென்றுகொண்டு இருக்கிறது. எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை நடத்துவது என தெரியாமல் தவிக்கிறோம். வாகனங்களை மாற்றுப் பாதையில் விட்டால்தான்  குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT