தமிழ்நாடு

மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

DIN

800 ஆண்டுகள் பழமையான மருந்தீஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மாத்தூரில் பெரியநாயகி சமேத மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடமுழுக்கு திருப்பணிகள் பல லட்சம்  மதிப்பீட்டில் நடைபெற்றது. 

இந்நிலையில் திருப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், கடந்த 10 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று காலை நான்காம் காலபூஜை  நிறைவுப்பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. 

பின்னர் விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ,புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT