முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து சரிந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →