தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை

DIN

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில், அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 நிதியாண்டுகளில் தெரு விளக்குகளை மாற்றுவதற்கு, சந்தை விலையை விட எல்இடி விளக்குகளின் விலையை கூடுதலாக நிர்ணயித்ததால் தமிழக அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியிருப்பது உறுதி சய்யப்பட்ட நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு, தொண்டாமுத்தூர், வடவள்ளி  உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது, சென்னையில்10 இடங்களிலும்,கோவையில் 9 இடங்கள் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT