ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐபேடு பகுதியில் கடந்த 9-ம்தேதி ஜெயந்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சுமார் பத்து சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து சோளிங்கர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அதைக் கண்டிக்கும் வகையில் ஜெயந்தி மற்றும் அவரது இரு மகள்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.