நரிக்குறவர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களான நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கத்தைச் சேர்ந்தவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
எம்.பி.சி.ஆக இருந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.
தற்போது அதன் விளைவாக நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.