திருப்புவனத்தில் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமையில் திமுகவினர் அண்ணா உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் துவியும் மரியாதை செலுத்தினர். 
தமிழ்நாடு

அண்ணா பிறந்த நாள்: திருப்புவனத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக சார்பில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக சார்பில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருப்புவனம் மார்க்கெட் வீதியில்  நடைபெற்ற இவ் விழாவில்  திமுக மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித்  தலைவருமான த.சேங்கை மாறன் தலைமையில் திமுகவினர் அண்ணா திருஉருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேங்கைமாறன் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். விழாவில் பங்கேற்றவர்கள் அண்ணாவை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர். 

விழாவில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கடம்பசாமி, நாகூர்கனி, அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளிலும் திமுக, அதிமுகவினர் அண்ணா திருஉருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மானாமதுரையில் வைகையாற்றுப் பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இக் கட்சியினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT