ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான தேர்வு தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு(எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) வருகிற அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நிர்வாகக் காரணங்களினால் இந்தத் தேர்வு நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, எழுத்துத் தேர்வு நவம்பர் 1 முதல் 5 வரையிலும் நேர்காணல் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு அட்டவணையை தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.