தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருவதை அடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55 கனஅடியாக அதிகரித்தது.

வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT