சசிகலா 
தமிழ்நாடு

‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’: சசிகலா

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று சசிகலா அளித்துள்ள பேட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று சசிகலா அளித்துள்ள பேட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியது,

அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும், நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் எனவும் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்றால் கேள்விக்கு? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் எனவும் அவர் பதிலளித்தார்.

மேலும் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT