தமிழ்நாடு

கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம்  நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் ஆலோசனை படி  நடைபெற்றது. 

DIN

 
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் கருத்தரங்கம்  நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் ஆலோசனை படி  நடைபெற்றது. 

உதவிப் பேராசிரியை மா.பத்மா வரவேற்று பேசினார். இணைச்செயலர் என்.ஆர். வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், முதல்வர் ஜி. ரேணுகா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அ.ஷர்மிளா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

உதவிப் பேராசிரியை ரா.தமிழ்ச்செல்வி, தமிழ்த்துறை முதலாமாண்டு மாணவி ரா.அபர்ணா மற்றும் கணினித் துறை மாணவி மெரினா ஜென்ஸி ஆகியோர் நூல் குறித்த கருத்துக்களை சிறப்புற எடுத்துக் கூறினர். 

இக்கருத்தரங்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கஸ்தூரி ராஜா பாமர இலக்கியம் என்னும் நூலின் கருத்துக்களையும், இலக்கியமும் இயற்கையும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்று கூறினார்.

பாமர இலக்கிய புத்தகம் ஒவ்வொரு துறையினருக்கும் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். உதவிப் பேராசிரியை க.சுதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT