தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 1,322 பள்ளிச் சிறார்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை:  தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் படித்து வரும் 1322 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து இரு அமைச்சர்களும் உணவு அருந்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, துணைத் தலைவர் லியாகத் அலி, முன்னாள் அரசு வழக்குரைஞர் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT