தமிழ்நாடு

விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 1500 மூட்டை முந்திரி கொட்டை தோல் மற்றும் 500 லிட்டருக்கும் மேற்பட்ட முந்திரி எண்ணெய் தீயில் எரிந்து நாசமானது.

DIN


விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 1500 மூட்டை முந்திரி கொட்டை தோல் மற்றும் 500 லிட்டருக்கும் மேற்பட்ட முந்திரி எண்ணெய் தீயில் எரிந்து நாசமானது.

விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். 

இந்நிலையில், தொழிற்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆலையில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் 1500 மூட்டை முந்திரி கொட்டை தோல் மற்றும் 500 லிட்டருக்கும் மேற்பட்ட முந்திரி எண்ணெய் தீ விபத்தில் எஎரிந்து நாசமானது. 

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

SCROLL FOR NEXT