தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

DIN

உள்ளாட்சியை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத்  தீர்ப்பதில் மக்களுடன் நேரடித் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியும், அதிகாரமும் வழங்காவிட்டால், அதன் நோக்கமே சிதைந்துவிடும். அண்மையில் ஊராட்சித் தலைவர்களுக்கு நிதியும், அதிகாரமும் வழங்கக் கோரி தமிழ்நாடு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வழங்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச்  செயல்படுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மேலும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களின் கோபத்துக்கு உள்ளாக நேரிடும்.

இந்த விவகாரத்தில் முதல்வரும், நிதி அமைச்சரும்  தலையிட்டு கிராம ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ஊராட்சித் தலைவரின் அதிகாரத்தில், பிறர் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT