தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக சரிவு!

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு சற்று தணிந்ததால் வெள்ளிக்கிழமை காலை  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT