விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பு
‘புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிப்பு
தமிழ்நாடுவிஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை நீட்டிப்பு
‘புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிப்பு
‘புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகா் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்ாக குறிப்பிட்டிருந்தாா். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகா் விஜய் வீட்டில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பாா்த்தது. அதன்படி, புலி படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.