முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தமிழ்நாட்டில் புதிதாக 479 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 479 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35,76,322ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 434 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 35,33,417 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை. இன்றைய நிலவரப்படி 4,865 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.