முகப்பு
தமிழ்நாடு

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 17 செப்டம்பர், 2022 at 4:32 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:51 PM

6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் இருந்த ஏ.ஜி.பாபு  காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பிரிவு டிஐஜியாகவும் நியமனம் செய்ய்ப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக (தலைமையிடம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.