பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காணொலி மூலமாக திருச்சி பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில் பெரியார் நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.