தமிழ்நாடு

'தின்பண்டம் தர முடியாது' - சங்கரன்கோவில் அருகே தீண்டாமை அவலம்! பரவும் விடியோ

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் என பரவும் விடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது எனக் கூறும் ஒரு விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விடியோவில், பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். அப்போது கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்றும் வீட்டில் சென்று இதனைச் சொல்லுமாறும் கூறுகிறார். 

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த விடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

பூஞ்செடிகள் விற்பனை நிலையத்தில் சரக்கு வாகனம் திருட்டு

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT