தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

DIN

நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்களை இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கா்நாடக மாநிலங்களில் மழை குறைந்துள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக இருந்தது. இது சனிக்கிழமையும் அதே நிலையில் நீடித்தது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் மீண்டும் பரிசல்களை இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளாா். முறையான பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டுமென சுற்றுலாப் பயணிகள், பரிசல் ஓட்டிகளை அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

வாரவிடுமுறையான சனிக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு பிரதான அருவி, மணல்மேடு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். அருவிகளுக்குச் செல்லும் நடைபாதை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT