முகப்பு
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, 12 நாள் போராட்டத்திற்குப் பிறகு மரணம்!

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ  வைத்து எரிக்கப்பட்ட 16 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ  வைத்து எரிக்கப்பட்ட 16 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி 16 வயது தலித் சிறுமியை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவர் மீது டீசல் ஊற்றி உயிருடன் எரிக்க முயற்சித்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 12 நாள்களுக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த வழக்கில், சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இருவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

லக்னெளவில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →