தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு ஒத்திவைப்பு

DIN

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலை படித்துபார்க்க மனுதாரரான அதிமுகவின் சூரியமூர்த்திக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் தேர்வானதை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு  தீர்மான வழக்கு  2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT