தமிழ்நாடு

தீண்டாமை விவகாரம்: பாஞ்சாங்குளத்தில் 5 பேர் நுழையத் தடை

DIN

பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை விவகாரத்தில் புகாருக்குள்ளான 5  பேரும் ஊருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகியோர் 6 மாதம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் நுழைய சிறப்பு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பாஞ்சாங்குளம் கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்து தீண்டாமை காட்டியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. பெட்டிக் கடை உரிமையாளரான மகேஸ்வரன்(40), ராமச்சந்திரன் என்ற மூா்த்தி (22) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அந்தக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கிராமத்தைச் சுற்றி காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே, பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்-மாணவிகளிடையே பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக, அப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா்  ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிலையில் ஊர்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டியலின மாணவர்களுக்கு  தின்பண்டம் தர மறுத்த விவகாரத்தில் நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT