தமிழ்நாடு

வாகனங்களுக்காக வளைந்து நெளிந்து போடப்பட்ட சாலை! எவ்வளவு புத்திசாலித்தனம்?

கோவை கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் புதிதாகப் போடப்பட்டு வரும் தார் சாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மின் மயான வாகனங்களுக்காக வளைந்து நெளிந்து போட்டுள்ளனர்.

DIN

கோவை கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் புதிதாகப் போடப்பட்டு வரும் தார் சாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மின் மயான வாகனங்களுக்காக வளைந்து நெளிந்து போட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை தற்போது புதிதாக சாலைபோடும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் நடக்கும் இப்பணிகள் அதிகாலை வரை நடக்கிறது.

இதில் கவுண்டம்பாளையம் அருகே எருக்கம்பெனி பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பழுதடைந்த மின் மயான வண்டி மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளை அப்புறப்படுத்தாமல் சாலை போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அந்த வாகனம் நிற்கும் பகுதியில் சாலை வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வளைந்து நெளிந்து போட்டுள்ளனர்.

சாலைப் பணிகளை மேற்கொள்ளும் முன் அந்த இடங்களில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றிவிட்டு சாலைகளைப் போட்டால் பயனுள்ளதாக இருக்கும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லாண்டியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா

கூடலழகா் பெருமாள் கோயில் கருட சேவை

ராகுலை சந்திக்க விஜய்க்கு யார் அனுமதியும் தேவையில்லை: கே.எஸ். அழகிரி

வெள்ளைப் புறாவொன்று... மதுமிதா!

திரு-மணக் கனவு... அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT