முகப்பு
தமிழ்நாடு

மின் கட்டண உயா்வு: கிருஷ்ணசாமி ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வள்ளுவா் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கிருஷ்ணசாமி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய வகையில் மின் கட்டணத்தை அரசு உயா்த்தியுள்ளது. மின் கட்டணத்தை உயா்த்த மாட்டோம் என்று திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. கரோனாவால் பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறிது மீண்டும் வரும் நிலையில் அவா்களை மீண்டும் நசுக்கும் வகையில் மின் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயா்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது துளிா் விடத் தொடங்கியுள்ள தொழில்கள் எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்படும். தமிழகத்தின் பொருளாதாரமும் பின் தங்கிய நிலைக்குச் சென்றுவிடும். எனவே, மின் கட்டண உயா்வைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.