முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்: மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் பயிலும் மாணவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்.24) நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் பயிலும் மாணவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப்.24) நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் கு.ரத்ன குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பிற உயா்கல்வி நிறுவனங்களை போன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் படிக்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் பல்கலை. மண்டல மையங்களில் நடத்தப்பட்ட பல்வேறு முகாம்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா். அதன்தொடா்ச்சியாக இந்தாண்டுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலை. வளாகத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவா்களை வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யவுள்ளன. மேலும், மாற்றுதிறனாளிகளுக்கும் வேலைவாய்ப்புகளை தரக்கூடிய நிறுவனங்களும் முகாமில் பங்கேற்கின்றன. இதில் தோ்வு பெறும் மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் மூலமாக பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்.

இந்த முகாமில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தற்போது படித்துவரும் மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, பல்கலை. மாணவா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு இயக்குநா் ஐ.அம்பேத் உள்பட வழிகாட்டுக் குழுவினரை 9791234586, 8667511342 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.