பள்ளிக்கல்வித்துறை 
தமிழ்நாடு

மாற்றுப் பணி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை

மாற்றுப் பணியில் இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

DIN

மாற்றுப் பணியில் இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இல்லம் தேடிக்கல்வி, திட்ட கட்டகங்கள் தயாரிப்புப் பணி,மொழிபெயர்ப்பு பணி, மின் பாடப்பொருள் தயாரிப்புகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிகளில் வகுப்பறைகளில் பாடம் எடுக்க ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மாற்றுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை ஆசிரியர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

111 முதுநிலை ஆசிரியர்கள், 32 பட்டதாரி ஆசிரியர்கள், 39 இடைநிலை ஆசிரியர்களுக்கு என 182 பேருக்கு பதிலாக ரூ.7,500, ரூ.10,000, ரூ.12,000 என்ற தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக ஆசிரியர்கள் நியமத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT